க்ரைம்

சென்னை | வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை: இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர், அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவீதா (50).இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் தண்ணீர் கேட்பதுபோல வீட்டுக்குள்ளே நுழைந்து, சவீதாவை தாக்கி, அவர் இடது காதில் அணிந்திருந்த 2 கிராம் எடை கொண்ட தங்கக் கம்மலை பிடித்து இழுத்து அறுத்துக் கொண்டு ஓடினார். அக்கம் பக்கத்தினர் திரண்டு கொள்ளையனை துரத்திச் சென்று பிடித்தனர்.

பின்னர், இதுகுறித்து போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் அந்த நபரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில், பிடிபட்டவர் மயிலாப்பூர், கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (33) என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து சவீதாவிடமிருந்து பறிக்கப்பட்ட கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பிரவீன்குமார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இது ஒருபுறம் இருக்க தாக்குதலுக்குள்ளான சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

SCROLL FOR NEXT