க்ரைம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் திருட்டு வழக்கில் 26 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும்திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீஸார் குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ளோரை தீவிரமாக தேடிவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் கடந்த 21 முதல் 27-ம் தேதி வரையிலான 7 நாட்களில் பதிவான திருட்டு தொடர்பான 14 வழக்குகளில் தொடர்புடைய, 3 இளஞ்சிறார் உட்பட 24 குற்றவாளிகளை கைதுசெய்தனர். மேலும், கடந்த ஒரு வாரத்தில் இருசக்கர வாகனதிருட்டு தொடர்பான 2 வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.

சென்னை போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வாகனங்கள் திருட்டு, செல்போன், செயின் பறிப்பு மற்றும்திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT