ஆம்பூர்: ஆம்பூர் அருகே பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர், வேலூர் மாவட் டங்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தர இருப்பதை முன்னிட்டு வரவேற்பு பேனர் வைப்பதற் காக கட்சி நிர்வாகிகள் சிலருடன் அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் வி.பி.லோகேஷ் பல்வேறு இடங்களை நேற்று முன்தினம் பார்வையிட்டார். இதையடுத்து, ஆம்பூர் அருகே ஜமீன் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தக் கட்சி நிர்வாகிகளுடன் லோகேஷ் சென்றார்.
அப்போது உணவக உரிமையாளர் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் ‘ஜெய் ஸ்ரீராம்' என கூறி வாழ்த் துக்களைப் பரிமாறிக் கொண்ட தாகக் கூறப்படுகிறது. அப்போது அதே உணவகத்தில் அமர்ந்திருந்த சில நபர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் வி.பி. லோகேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
காய மடைந்த அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை காவல் கண் காணிப்பாளர் சரவணன் தலை மையிலான ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்று விசா ரணை நடத்தினர். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் ஆம்பூருக்கு வந்து சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய சம்ப வத்தில் தொடர்புடைய வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு ( 25 ), இஸ்மாயில் ( 25 ), வசீம் ( 23 ) ஆகிய மூவரையும் ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.