சரண்யா 
க்ரைம்

மதுரை ஆயுதப்படை முதல் நிலைப் பெண் காவலர் தற்கொலை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை ஆயுதப்படை முதல் நிலைப் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ஆயுதப் படையில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் சரண்யா ( 33 ). இவரது கணவர் பாலாஜி, 2 குழந்தைகள் உள்ளன. சரண்யா குடும்பத்துடன் ஆயுதப் படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை சரண்யா குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சரண்யா தற்கொலை செய் வதற்கு முன்பு மொபைல் போனில் அனுப்பிய செய்தியில், ‘அனைத்து மேடம்களுக்கும் பிற்பகல் வணக்கம். எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. சிட்டி ஆயுதப் படைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நாட்களாக என் மீது யாருக்காவது கோபம் இருந்தால் மன்னித்துவிடுங்கள். சாரி, அனைத்து மேடம்கள், சகோதரிகள் மீது அன்பு செலுத்துகிறேன். உங்களை இழக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக் கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

SCROLL FOR NEXT