மதுரை: நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குநர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில், சிவகங்கை மாவட்டம் தமராக்கி குமாரப்பட்டியைச் சேர்ந்த அசோக் மேத்தா, மதிவாணன் ஆகி யோரை, பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி மணிஷா தலை மையிலான போலீஸார் நேற்று கைது செய்தனர். இதில் அசோக் மேத்தா, நியோ மேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ நிறுவனத்தின் இயக்குநராக இருந்து 400 பேரிடம் ரூ.60 கோடி வசூலித்துள்ளார்.
மதிவாணன் டிரிடாஸ் நிறு வனத்தின் இயக்குநராக இருந்து 200 பேரிடம் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான இவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இருவரும் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.