உடுமலை: பொள்ளாச்சி பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (55). பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரும், அதே பகுதியில் வசிக்கும் குமார் (25) என்பவரும் சேர்ந்து பறவைகள் பிடிப்பதற்காக சென்றனர்.
கடந்த 27-ம் தேதி உடுமலை அடுத்த தாந்தோணி கிராமத்துக்கு சென்றபோது, இவர்களை கோழி திருடர்கள் என நினைத்து அதே பகுதியை சேர்ந்த சிலர் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதில், செங்கோட்டையன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ.சுகுமாரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்து, தாந் தோணியை சேர்ந்த விவசாயிகள் செல்வகுமார், சசிக்குமார், செல்லதுரை ஆகிய 3 பேரையும் ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவான நபர்களை தேடி வந்தனர். இதில், செந்தில் குமார், செல்வ ராஜ், சண்முகம் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பொன்னுசாமி, செல்வகுமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.