க்ரைம்

சென்னை | போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச இளம்பெண் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அப்போது வந்த இளம் பெண்ணின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மத்திய பிரதேசம், போபால் முகவரியுடன், ஜல்குரி வில்லாகி என்ற பெயருடைய 25 வயது இளம்பெண்ணின் பாஸ்போர்ட் போலியானது என்பது தெரிந்தது. விசாரணையில் ஷர்மின் அக்தர் என்ற பெயர் கொண்ட அந்த பெண் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், போபாலில் ஏஜெண்டுகளுக்குபணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT