சென்னை: சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் 40 வயதுடைய பெண் ஒருவர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ``நேற்று முன்தினம் (24-ம் தேதி)மதியம் பாண்டிபஜார், ஜி.என் செட்டி சாலையில் உள்ள மாநகராட்சி வாகனநிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த ஒருவர் என்னிடம் இங்கு வாகன கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்று தகராறு செய்தார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த மற்றொரு மாநகராட்சிபெண் ஊழியர் இதுகுறித்து கேட்கவே, 2 பெண் ஊழியர்களையும்,அbர் தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே, அபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் தெரிவித்து இருந்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.இதில், தாக்குதல் நடத்தியவர் தி.நகர், டாக்டர் தாமஸ் சாலையைசேர்ந்த சேகர் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.