க்ரைம்

சைபர் மோசடியைத் தடுக்க நடவடிக்கை; 55 லட்சம் சிம் கார்டு, 1.32 லட்சம் மொபைல் போன்கள் முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் மக்களிடையே மொபைல் மற்றும் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு மோசடியான இணைய இணைப்புகளை அனுப்பி பணம் பறித்தல், வங்கி அதிகாரிகள் போல் பேசி மக்களிடமிருந்து வங்கி கடவுச்சொல்லை ஏமாற்றிப் பெறுதல் உட்பட பல்வேறு வகையான சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளன. சைபர் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கிவருகிறது. அதன்படி தற்போது 55 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல், சைபர் மோசடியாளர்கள் 4 லட்சம் மக்களிடம்இருந்து ஏமாற்றிப் பெற்ற ரூ.1,000கோடியை மத்திய அரசு மீட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “சைபர் மோசடி மூலம் பணம் மோசடி செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசுதீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போலி ஆவணம் மூலம் பெறப்பட்ட 55 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல், சைபர் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1.32 லட்சம் மொபைல் போன்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT