க்ரைம்

பாஜக பிரமுகர் இல்ல திருமண விழாவில் மொய் பணத்தை திருடியதாக புகார் @ உளுந்தூர்பேட்டை

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன். இவரது இல்லத் திருமண விழா, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், திருமண விழாவுக்கு வந்தவர்கள் மணமக் களுக்கு அளித்த மொய் பணத்தை, திருமண வீட்டார் ஒரு பையில் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியே சென்ற போது மொய் பணம் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது.

இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, ஒரு சிறுவன் மொய் பணம் வைத்திருந்த பையை எடுத்துச் செல்வது பதிவாகி உள்ளது. இது பற்றி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அஸ்வத் தாமன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT