க்ரைம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கணவன், மனைவி உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த ஒருவாரகாலத்தில் சென்னை கொடுங்கையூர் விஜய் என்ற ஜாக்கி (21), பழைய வண்ணாரப்பேட்டை மதன் என்ற ஜெயக்குமார் (26), கோடம்பாக்கம் அப்பு என்ற புதூர் அப்பு (40), சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பிரகாஷ் என்ற சித்திக் அலி (36), அவரது மனைவி ஷாகின் (40) உள்ளிட்ட 9 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT