வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காந்தி நகரை சேர்ந்தவர் இலங்கை தமிழர் அமலநாயகி (50). இவர் இந்தியவாக்காளர் அட்டை பெற்றுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், அமலநாயகி முகாமில் வசிக்காமல் தனியாக வத்தலகுண்டு காந்தி நகர் பகுதியில் வசிப்பதும், சட்டவிரோதமாக இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அகதிகள் முகாம்துணை வட்டாட்சியர் மனோகரன், வத்தலகுண்டு போலீஸில் புகார்அளித்தார். அமலநாயகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.