க்ரைம்

பாகிஸ்தான் ட்ரோன் வீசிய 565 கிராம் ஹெராயினை கைப்பற்றியது பிஎஸ்எஃப்

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மோட் கிராம பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் மூலம் ஹெராயின் கடத்தல் நடைபெறவுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை யினருக்கு (பிஎஸ்எஃப்) தகவல் கிடைத்தது.

இதையடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பிஎஸ்எஃப் வீரர்கள், நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் பகுதியில் இருந்து நுழைந்த டரோன் ஒன்றை இடைமறித்து அழிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த ட்ரோன் பொட்டலம் ஒன்றை வீசிவிட்டு திரும்பிச் சென்றது. அப்பகுதியில் பிஎஸ்எஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பொட்டலம் ஒன்றில் 565 கிராம் ஹெராயின் இருந்தது. அதை அவர்கள் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT