க்ரைம்

துபாயில் இருந்து மதுரை வந்த பெண் பயணியிடம் ரூ.27.8 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.27.8 லட்சம் மதிப்புள்ள 458 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தகவல் கிடைத்தது. அதன் பெயரில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளை சோதனை மேற்கொண்டனர்.

துபாயில் இருந்து மதுரை வந்த திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (42) என்பவர் அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ.27,86,930 மதிப்பிலான 458 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து, அந்தப் பெண் பயணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT