நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டாறில் தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிமருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருக்கு, சக மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு நேற்று சென்ற போலீஸார், புகார் தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பயிற்சி மருத்துவ மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பின்னர், கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறைவிட மருத்துவராகப் பணிபுரியும் ஆண்டனி சுரேஷ்சிங் (55) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.