க்ரைம்

வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: கொத்தமங்களத்தில் 1,100 போலீஸார் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே விவசாய தோட்டத்தில் மர்ம நபர்கள் 2,250 வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பரமத்தி வேலூர் அருகே கொத்தமங்களம் கிராமத்தில் உள்ள இரு விவசாய தோட்டத்தில் நேற்று முன் தினம் 2,250 வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 600 போலீஸார், ஜேடர் பாளையம், கொத்தமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் நேற்று மேலும், 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT