துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக பிடிபட்ட கேரள இளைஞர்களிடம் கொடைரோட்டில் விசாரணை நடத்தும் ரயில்வே போலீஸார். 
க்ரைம்

ரயிலில் பொம்மை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய கேரள இளைஞர்கள்: கொடைரோட்டில் சுற்றி வளைத்த போலீஸார்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் கைத்துப்பாக்கியை காட்டி கேரள இளைஞர்கள் பயமுறுத்தியதாக பயணிகள் புகாரின்பேரில் அவர்களை கொடைரோடு ரயில்வே போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் கள் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி எனத் தெரிய வந்தது.

கேரள மாநிலம், பாலாக்காடு நகரில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் சென்று கொண் டிருந்தது.

நேற்று காலை திண்டுக்கல்லை அடுத்து ரயில் சென்றபோது நீண்ட தலைமுடி மற்றும் பெரிய டிராவல் பேக்குகளுடன் பயணம் செய்த 4 இளைஞர்கள், நவீனரக கைத்துப்பாக்கியில் புல்லட்டை சொருகுவது போல செய்து காட்டி சக பயணிகளை அச்சுறுத்தி உள்ளனர்.

இதனால் அவர்கள் தீவிரவாதி களோ என அச்சம் அடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே அவசர புகார் எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கொடைரோடு ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, ரயில்வே போலீஸார் மற்றும் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலை மையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார், இளைஞர்கள் பயணம் செய்த பெட்டியை சுற்றி வளைத்தனர்.

பொம்மை துப்பாக்கி

துப்பாக்கி வைத்திருந்த 4 இளைஞர்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளை சோதனை யிட்டு காவல் நிலையத்துக்கு விசார ணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியை சோதனையிட்டபோது, அது பொம்மை துப்பாக்கி எனத் தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீப் (19), கண்ணூரைச் சேர்ந்த அப்துல்ராசிக் (24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா (18), காசர்கோட்டைச் சேர்ந்த முகமதுசின்னான் (20) என்பது தெரியவந்தது.

இவர்கள் ரயிலில் மதுரை வரை சென்று, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவுக்கு செல்ல இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும் 4 பேரும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மற்றும் அபராதம் விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ரயில்வே போலீஸார் ஆலோசித்து வரு கின்றனர்.

SCROLL FOR NEXT