ராணிப்பேட்டையில் உள்ள சென்னை - சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட கீதாவின் உறவினர்கள். 
க்ரைம்

ராணிப்பேட்டையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் பெண் தற்கொலை

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: வாங்கிய கடனை செலுத்தா விட்டால் வீட்டை பூட்டி ‘சீல்' வைப்போம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதாக கூறி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை கண்டித்து, அவரது உறவினர்கள் சென்னை - சித்தூர் சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த புதிய அக்ராவரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் மெக்கானிக் மணி (50). இவரது மனைவி கீதா (45). இவர், சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கீதா தனது வீட்டு பத்திரத்தை ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து ரூ.9 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனுக்காக மாத தவணையை செலுத்தி வந்த கீதா கடந்த சில மாதங்களாக தவணை தொகையை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், கீதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை மிரட்டி வந்தது மட்டும் அல்லாமல் வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்தாவிட்டால் வீட்டை பூட்டி ‘சீல்' வைப்போம் என கடந்த 2 நாட்களுக்கு முன்பு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கீதா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த கீதா

அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது கைபேசி மூலம் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வீடியோ பதிவு உ பதிவிட்டுள்ளார். அதில், வீட்டு கடன் தொகையை கட்டச் சொல்லி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், கடன் தொகையை கொடுக்கா விட்டால் வீட்டை பூட்டி ‘சீல்' வைப்பதாக கூறி மிரட்டுவதால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்கிறேன்.

எனது இறப்பு மூலம் எனக்கு சேர வேண்டிய செட்டில்மென்ட், பி.எப் பணத்தை வாங்கி கடனை செலுத்தும்படியும், தன்னை அனைவரும் மன்னிக்க வேண்டும்’’ என அதில் அவர் கண்ணீருடன் பேசிய காட்சி வெளியாகியுள்ளது. இதனால், ஆத்திர மடைந்த கீதா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை நேற்று முற்றுகை யிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், சென்னை - சித்தூர் சாலையில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என காவல் துறையினர் வாக்குறுதி அளித்தனர். இதனை யேற்று, அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, கீதா உடலை கைப்பற்றிய சிப்காட் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் கீதா தற்கொலை குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT