பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி. 
க்ரைம்

சென்னை | உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி கடத்தி விற்றதாக 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்(32). இவரது வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டேரி சந்திப்பு அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற யோகேஷை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து, அதை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், யோகேஷ் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற படங்கள்இருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி வாங்கியதாகவும், அதை கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அபுதாஹீர்(42) என்பவருக்கு விற்றதாகவும் யோகேஷ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு துப்பாக்கி கடத்தி வந்து
விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டோர்.

இதையடுத்து அபுதாஹீர் வீட்டில் இருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த கொளத்தூர் சையது சப்ராஸ் நவாஸ்(41), புழல் ரஹமதுல்லா(31) மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முக்தார் ஆகியோரையும் கைது செய்து, 20 மது பாட்டில்கள், 6 செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT