தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கடந்த 7-ம் தேதி நாகர்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தை சணல்குமார் (50) என்பவர் இயக்கினார். நடத்துநராக தனசேகர் (50) இருந்தார்.
வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே, பைக்குகளில் வந்த 7 பேர் பேருந்தை மறித்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை தாக்கினர். பேருந்தின் கண்ணாடியையும் உடைத்தனர். பேருந்தில் மதுபோதையில் தகராறு செய்த நண்பரை நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த தாக்குதலை நடத்தினர். புதுக்கோட்டை போலீஸார் தூத்துக்குடி அண்ணாநகர் காளீஸ்வரன் (26), முனீஸ்வரன் (24), மோகன்குமார் (20) மற்றும் 4 சிறுவர்களை கைது செய்தனர்.