க்ரைம்

எழும்பூரில் தனியார் பேச்சு பயிற்சி பள்ளியில் 3 வயது குழந்தையின் கை, கால்கள் கட்டிப்போட்டு பயிற்சி: புகாரின் பேரில் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி வழங்கும் தனியார் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் சையது நவாஸ் என்பவர், பேச்சு திறன் குறைபாடு இருந்த தனது 3 வயது ஆண் குழந்தையை பேச்சு பயிற்சி வகுப்பில் சேர்த்திருந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துவர குழந்தையின் தாத்தா அம்ஜத் கான் சென்றிருந்தார்.

அப்போது, வகுப்பில், குழந்தையின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், குழந்தை அழுத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வகுப்பில் இருந்த பேச்சு பயிற்சி வழங்கும் ஆசிரியர் ஞானசேகரன் என்பவரை கண்டித்ததுடன் எழும்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி வழங்கும் சிகிச்சை முறையில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT