கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த கன்டெய்னர் லாரியின் மேற்பகுதியில் இருந்த ரகசிய அறையில் 300 பாக்கெட் டுகளில் தலா 2 கிலோ வீதம் 600 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதை மதுவிலக்கு பிரிவிடம் ஒப்படைத்தனர். லாரி ஓட்டுநர் புதுச்சேரிஏனம் குதியைச் சேர்ந்த ஷெட்டி பாபு(39), லாரியில் இருந்த தூத்துக்குடி விஜயகுமார்(36), தூத்துக்குடி கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த மதபோதகர் ஜான் அற்புத பாரத் (33) ஆகிய 3 பேரை கைதனர்.