க்ரைம்

சென்னை | நிலம் வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

மயிலாப்பூர், தெற்கு மாட வீதியில் வசித்து வருபவர் ரவி (50). இவர் சொந்தமாக இடம் வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக நிலம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (46) என்பவரது அறிமுகம் ரவிக்கு கிடைத்துள்ளது. நிலம் வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதை உண்மை என நம்பி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகுமாரிடம் 2017 முதல் 2018 வரை சிறுக சிறுக என மொத்தம் ரூ.35 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் உறுதியளித்தபடி கிருஷ்ணகுமார் நிலத்தை வாங்கி கொடுக்கவில்லையாம். பெற்ற பணத்தை திரும்ப தராமல் மோசடிசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT