க்ரைம்

ஆண்டிபட்டி அருகே மிளகாய் பொடி தூவி கணவரை வெட்டி கொலை செய்த மனைவி கைது

செய்திப்பிரிவு

ஆண்டிபட்டி அருகே மிளகாய் பொடி தூவி கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். ஆண்டிபட்டி பாலக்கோம்பை அருகே, ராயவேலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் (37). இவரது மனைவி அழகுசின்னு. கூலி தொழிலாளிகளான இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் சமரசம் செய்து வைத்ததில் 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.

நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அழகுசின்னு, தனது கணவர் சண்முகவேலின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து ராஜதானி காவல் ஆய்வாளர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து அழகுசின்னுவை கைது செய்து விசாரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT