க்ரைம்

பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியது தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது

செய்திப்பிரிவு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தது குறித்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், அதே பள்ளியில் பிளஸ்-2 தொழிற்பிரிவு பயிலும் இரு மாணவர்கள், வகுப்பறைகளின் பூட்டுகளில் மனிதக் கழிவு பூசியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பள்ளியில் எந்த தவறு நடந்தாலும், ஆசிரியர் ஒருவர் தங்கள் மீது பழி போட்டு திட்டியதால், வகுப்பறைகளின் பூட்டுகளில் மனிதக் கழிவை பூசியதாக மாணவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் போலீஸார் எச்சரித்து, மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதால், அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT