க்ரைம்

மசினகுடி தங்கும் விடுதியில் பெண்ணை வீடியோ எடுத்த ஊழியர் கைது

செய்திப்பிரிவு

மசினகுடி: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் தம்பதி, நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். மசினகுடியை அடுத்த ஆச்சக்கரை பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

ஜன்னலின் மறைவான பகுதியில் இருந்தவாறு இளைஞர் ஒருவர், செல்போன் மூலமாக பெண்ணை வீடியோ எடுப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். கணவரும், அங்கிருந்த மற்ற சுற்றுலா பயணிகளும் வந்து இளைஞரை பிடித்தனர். விசாரணையில், வீடியோ எடுத்த இளைஞர் மசினகுடியை சேர்ந்த ஷிண்டு (22) என்பதும், அதே தனியார் விடுதியில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மசினகுடி காவல் நிலையத்தில் இளைஞரை ஒப்படைத்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் திருமலை ராஜன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து ஷிண்டுவை கைது செய்தனர். கூடலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஷிண்டுவை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT