கைதான வாசுதேவன். 
க்ரைம்

தி.மலையில் காவல் துறை இரும்பு தடுப்பில் பைக்கை மோதிவிட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர் கைது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: காவல் துறை இரும்பு தடுப்பின் மீது இரு சக்கர வாகனத்தை மோதி அதை ரஜினி பாடலுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட அகில பாரத இந்து மகாசபை திருவண்ணாமலை மாவட்டத் தலைவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் காவல் துறையினர் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். இதில், பெரிய தெரு சந்திப்பு பகுதியில் இருந்த இரும்பு தடுப்பு ஒன்றை இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மோதி கீழே தள்ளும் ரீல்ஸ் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

அந்த வீடியோ காட்சியில் ரஜியின் ‘கெத்தா நடந்து வரான் கேட்டை எல்லாம் தாண்டி வரான்’ என்ற பாடலை சேர்த்திருந்தனர். இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் திருவண்ணா மலை நகர காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், காவல் துறையின் இரும்பு தடுப்பு மீது இரு சக்கர வாகனத்தில் மோதியவர் அகில பாரத இந்து மகாசபையின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வாசுதேவன் என்பது தெரியவந்தது.

அவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் இரும்பு தடுப்பு மீது மோதியதும், அப்போது அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இந்த காட்சிகளை அவரது நண் பர்கள் சிலர் செல்போனில் பதிவு செய்து ரீல்ஸ்-களாக மாற்றி சமூக வலைதளங்களில் வெளி யிட்டது உறுதியானது. ரீல்ஸ் காட்சிகள் வைரலாகி காவல் துறையினர் விசாரிக்கும் தகவலை தெரிந்து கொண்ட வாசுதேவன் தலைமறைவானார். அவரை. காவல் துறையினர் நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT