க்ரைம்

அவிநாசி அருகே இரும்பு உருக்காலை சிலிண்டர் வெடித்து உ.பி. தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கானூரில், 2008-ம் ஆண்டு முதல் இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில தொழிலாளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், பழைய இரும்புகளை வாங்கி அரைத்து, புதிதாக கம்பிகள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில், வழக்கம்போல நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிறுவனத்துக்குள் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சேவூர் போலீஸார் சென்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு முன்பு, அவிநாசி அருகே கானூருக்கு வந்த ராஜேஷ், சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது, அவரது குடும்பத்தினர் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT