சென்னை: சென்னையில் மின்சாரம் தடைபட்ட நேரத்தை பயன்படுத்தி செக்யூரிட்டி அதிகாரியின் வீடு புகுந்து 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
சென்னை மேற்கு மாம்பலம், ரெட்டிகுப்பம் சாலையைச் சேர்ந்தவர் ஹரீஸ்குமார். இவர் தனியார் காவலாளி (செக்யூரிட்டி) நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வசிக்கும் பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் காற்றுக்காக இவரது குடும்பத்தினர் வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினர்.
அப்போது யாரோ வீட்டுக்குள் நுழைந்து, பீரோவிலிருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.நேற்று காலையில் ஹரீஸ்குமார் குடும்பத்தினருக்கு நகை, பணம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிமாலா தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.