க்ரைம்

சென்னை | ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் திருட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக குமரன் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அசோக்நகர் 11-வது அவென்யூவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராகவன் (76) வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக அவர், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி வீட்டின் மூன்றாவது தளத்தில் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அந்த பொருட்கள் திருடுபோயின. இதுகுறித்து அவர், குமரன்நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்டமாக அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸார் துப்புதுலக்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT