சென்னை: கடந்த 2007-ம் ஆண்டு அக்.25-ம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரம் சந்திப்பில் யானை கவுனி போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த மலர்மன்னன் (42), கல்யாணபுரம் பள்ளம் பகுதியை சேர்ந்த முத்து (40) மற்றும் அம்பத்தூரை சேர்ந்த ராஜூ (43) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது அவர்களை கைது செய்து 3.3 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, பறிமுதல் செய்த சுமார் 3 கிலோ கஞ்சாவும் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையில் சேதமடைந்து விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கில் ஏற்கெனவே மலர்மன்னன் மீதான வழக்கு கைவிடப்பட்ட நிலையில், எஞ்சிய முத்து மற்றும் ராஜூ ஆகிய இருவரையும் விடுதலை செய்து நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா தீர்ப்பளித்துள்ளார்.