க்ரைம்

விசாரணைக்கு சென்றவரை தாக்கியதாக வத்தலகுண்டு காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை

செய்திப்பிரிவு

வத்தலக்குண்டு: விசாரணைக்கு அழைத்து சென்றவரை அடித்து துன்புறுத்தியதாகக் கூறி, அதைக் கண்டித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த கரண் குமார் (25), பால முருகன் (25) உட்பட 3 பேரை செல்போன் திருட்டு தொடர்பான விசாரணைக்காக, வத்தல குண்டு போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்நிலையில், கரண் குமார் உடலில் காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த அவரது உறவினர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாகக் கூறி, வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் நேரில் விசாரித்தார். விசாரணையில், காவல் நிலைய மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது அவர் காயமடைந்தது தெரியவந்தது.

SCROLL FOR NEXT