ராஜேஷ் 
க்ரைம்

படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - செயலி மூலம் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஏரிவேலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(27). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஆன்லைன் செயலியில் கடன் பெற்று, அதை ஓராண்டுக்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர் ராஜேஷை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு, மேலும் பணம் செலுத்தும்படி கூறியதுடன், ராஜேஷின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதாகவும் தெரிகிறது. வேதனையில் கடந்த 24-ல் விஷம் அருந்திய ராஜேஷ், தஞ்சை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். ராஜேஷுக்கு தென் ஆப்ரிக்காவில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாக போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT