க்ரைம்

திருப்போரூர் | நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம்

செய்திப்பிரிவு

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த சில ஆண்டுகளாக காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.

இந்த தொழிற்சாலையை சுற்றிலும் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து இருந்தன. இதனை அகற்றும் பணியில் பூஞ்சேரியை சேர்ந்த சீனு, தினேஷ், வாசு, முத்து ஆகியோர் நேற்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மரம் வெட்டியபோது கையில் இருந்த கத்தி அங்கிருந்த மூட்டை ஒன்றின் மீது பட்டது. அப்போது மூட்டை வெடித்து சிதறியது. இதனால் சீனுவின் முகம், தலை, கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீஸார் ஆய்வு செய்ததில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்பதும், மேலும் அந்த மூட்டையில் வெடிக்காமல் மேலும்2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட வெடிகுண்டுகள் செயலிழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். எஸ்பி ஜெகதீஸ்வரன், வட்டாட்சியர் பூங்கொடி பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT