க்ரைம்

காதலனுடன் வீடியோ காலில் பேசியபடி பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் செம்மார் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (25). இவர் கோயம்பேடு சேம்மாத்தம்மன் நகரில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்கியிருந்து, தலைமை செயலக காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பிய சுகந்தி நேராக சமையலறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது தம்பி உள்ளே சென்று பார்த்தார். சமையலறையில் சுகந்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீஸார் சுகந்தி உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகந்தி, திருப்பூர் ஆயுத படையில் பணிபுரிந்து வந்த காவலர் ஒருவரை காதலித்துள்ளார். கடந்த சில நாட்களாக சுகந்தியின் காதலன் அவரிடம் பேசாமல் இருந்ததால், மன உளைச்சலில் இருந்த சுகந்தி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனால், காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

SCROLL FOR NEXT