க்ரைம்

மகனை வெளிநாடு அனுப்ப பணம் தந்து ஏமாந்த தாய் தற்கொலை

செய்திப்பிரிவு

திருவாரூர்: மகனை வெளிநாடு அனுப்புவதற்காக ரூ.1 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜீயர் தோப்புப் பகுதியை சேர்ந்தவர் சந்திரகலா(45). இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி. இவரை போலந்து நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக வெளிநாடு அனுப்பும் முகவர்களான அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், பேட்டை ரவி ஆகியோரிடம் சந்திரகலா கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியை வெளிநாட்டுக்கும் அனுப்பவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சந்திரகலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT