க்ரைம்

பெண்ணுக்கு செல்போனில் தொல்லை: தாம்பரம் அதிமுக பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் இரும்புலியூர் சர்ச்ரோடு ஜெருசலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமணன்(47), திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் அதிமுகவில் தாம்பரம் மாநகர 53-வது வார்டு வட்ட செயலாளராக உள்ளார்.

இவர் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுடன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் வீட்டின் அருகாமையில் கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முதலில் பண உதவி செய்துள்ளார். இதை பயன்படுத்தி அடிக்கடி பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம் பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீஸார் அதிமுக வட்டச் செயலாளர் குமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT