க்ரைம்

மயிலாப்பூரில் ரவுடி டொக்கன் ராஜா கொலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளி ரவுடி டொக்கன் ராஜா நேற்று மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா (எ) டொக்கன் ராஜா(45). இவர் ரவுடி சிடிமணியின் கூட்டாளி. இவர் மீது கொலை, கொலை முயற்சி,ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் பாஜகவிலும் இணைந்து முக்கிய பொறுப்பையும் வகித்து வந்தார். கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட டொக்கன் ராஜா, சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியேவந்தார். டொக்கன் ராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் காரணமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை டொக்கன் ராஜா பல்லக்கு மாநகரில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று, திடீரென டொக்கன் ராஜாவை சுற்றி வளைத்து வெட்டியது. இதில், டொக்கன் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார், டொக்கன் ராஜா உடலை மீட்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்துவழக்குப்பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மாலை நேரத்தில் நடந்தஇந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT