க்ரைம்

சென்னை | 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு பெண் கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவொற்றியூர் தியாகராஜபுரத்தை சேர்ந்தவர்புஷ்பகாந்தன்(43); கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி(40). இவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 2-வதுதளத்தில் வசித்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் குமார்(50) என்பவர் வசித்து வருகிறார்.

எதிரெதிர் வீட்டில் இருக்கும் புஷ்பகாந்தனுக்கும், குமாருக்கும் வீட்டுக்கு வெளியே காலணி உள்ளிட்ட பொருட்களை வைப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினைஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி காலணி வைப்பது தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்போது குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, புஷ்பகாந்தனின் மனைவி, இருவரையும் சமாதானப்படுத்த வெளியே வந்தார். அப்போது, குமார், புஷ்பகாந்தனையும், அவரது மனைவியையும் பிடித்துத் தள்ளினார்.

இதில் வசந்தி நிலைதடுமாறி, வீட்டின் 2-வது தளத்திலிருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வசந்தி நேற்று உயிரிழந்தார். திருவொற்றியூர் போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT