மதுரை: மதுரை தெப்பக்குளம் தொண்டித்தொழு தெருவைச் சேர்ந்தவர் பீமஸ்ராய் (31). ஆசிரியர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. தெப்பக்குளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகிரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். அப்போது, கதவின் பூட்டை உடைத்து செல்போன் மற்றும் 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தெற்குவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர்.