க்ரைம்

தஞ்சாவூர்: 6 ஆட்டுக் குட்டிகள், 4 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் திருவிடைமருதூர் வட்டம், தேப்பெருமாநல்லூரில் 6 ஆட்டுக் குட்டிகள், 4 ஆடுகள் ஆகியவை மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தேப்பெருமாநல்லூர், கீழத்தெருவைச் சேர்ந்தவர் அமுதா (68). இவரது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் 5 ஆடுகள் மற்றும் 6 குட்டிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், மேய்ச்சலுக்கு விட்ட ஆடு மற்றும் குட்டிகளை தோட்டத்தில் கட்டி விட்டு, அமுதா வேறு வேலைக்கு வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அதிகாலையில் அமுதா ஆடுகளை மேய்ச்சல் விடுவதற்காகச் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, 4 ஆடுகள் மற்றும் 6 குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அமுதா, திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில் போலீஸார், அந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கால்நடை மருத்துவர் ஆனந்தகுமார், உயிரிழந்த ஆடு மற்றும் குட்டிகளை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டார். ஒரே நேரத்தில் 6 குட்டிகள், 4 ஆடுகள் உயிரிழந்தது தேப்பெருமாநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT