க்ரைம்

சென்னை | வீடு புகுந்து கொள்ளை: ஒருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (30). இவர்,நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஆட்டோவில் வந்த5 பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து,மாரீஸ்வரனை கத்தியைக் காட்டி மிரட்டினர். பின்னர் அவரையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கினர். மேலும், அவர்களிடமிருந்த பணம் மற்றும் 7 செல்போன்களை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம்போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதோடு பணப்பறிப்பில் ஈடுபட்டது பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த விஜய் பிரபு (26) என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 செல்போன்கள், 1 ஆட்டோ மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கைது செய்யப்பட்ட விஜய்பிரபு ஆட்டோ ஓட்டி வருவதும், அவர் தனது நண்பர்களான கல்லறை ஜான், விஜய் பாபு மற்றும் மேலும் இருவருடன் சேர்ந்து வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள கல்லறை ஜான் உட்பட 4 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT