க்ரைம்

ராஜபாளையம் | விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சித் தலைவர் கைது

அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன் பாபாபாண்டியன்(50). இவரது மனைவி ரூபாராணி (45). பொன் பாபா பாண்டியன் தனது மனைவி ரூபா ராணி பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு கீழராஜகுலராமன் ஊராட்சி தலைவர் காளிமுத்து (70) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பின் ரூ.6 ஆயிரம் வழங்குமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறையில் பொன்பாபாபாண்டியன் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஊராட்சி தலைவர் காளிமுத்துவிடம் இன்று காலை பொன் பாபா பாண்டியன் வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சால்வன்துரை, பூமிநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி தலைவர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT