உதகை: கோவையை சேர்ந்த யூ டியூபர் வாசன் அடிக்கடி அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை உதகை ஹில் பங்க் சாலையில் அதிவேகமாக பைக் ஒன்று வந்தது.
ரோந்து பணியில் இருந்த போலீஸார் பைக்கை நிறுத்தினர். ஆனால் அந்த பைக் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. உடனடியாக போலீஸார் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்து நகர் அருகே போலீஸார் அந்த பைக்கை மடக்கினர். பைக்கை ஓட்டிவந்தது யூ டியூபர் வாசன் என்பது தெரியவந்தது. அதிவேகமாக பைக் ஓட்டியதற்காக அவருக்கு, புது மந்து காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ரூ.1,000 அபராதம் விதித்தார்.