க்ரைம்

சோழவந்தான் அருகே 6-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகிலுள்ள மன்னாடி மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள். இளைய மகன் சண்முக வேல் (11). அரசு பள்ளி யில் 6-ம் வகுப்பு படித்தார்.

நேற்று முன் தினம் காலை வீட்டிலுள்ள கழிப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவர் சண்முகவேலை மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதற்கிடையே மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காடுபட்டி போலீஸில் அருள்குமார் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT