க்ரைம்

சேலம் அருகே பெண்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெண்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை ஆத்தூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் கல்லாங்குத்து வஉசி நகர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மகன் பவுல்ராஜ் (27), ஆத்தூர் லீ பஜார் பேருந்து நிறுத்தம் பகுதியில் டயர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பவுல்ராஜ் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் அவ்வழியாக செல்லும் பெண்களை அவரது செல்போனில் படம் பிடித்து மார்ஃபிங் மூலம் சித்தரித்து, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதை வலைதளங்களில் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் பவுல்ராஜை பிடித்து, அடித்து அவரின் செல்போனை பறித்து, ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆத்தூர் நகர போலீஸார் பவுல்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT