கரோனா வைரஸ்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது.

நேற்று 43 ஆண்கள், 54 பெண்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேருக்கும், கன்னியாகுமரியில் 15 பேருக்கும், கோவையில் 14 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்து 9,751 ஆக அதிகரித்துள்ளது.

அரியலூர், வேலூர், விருதுநகர் உட்பட 16 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. நேற்று மட்டும்320 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1,426 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றுஉயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT