புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரம்: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோல 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை இந்த தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,114 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 220.66 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.