புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 5,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,761 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பால் நேற்றுமட்டும் 21 பேர் உயிரிழந் துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.