சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் நேற்று 140 ஆண்கள், 133 பெண்கள் என நேற்று 273 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 98 பேரும், செங்கல்பட்டில் 28 பேரும், கன்னியாகுமரியில் 24 பேரும், கோவையில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 31 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 93 லட்சத்து 7 ஆயிரத்து 891 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 35 லட்சத்து 98 ஆயிரத்து 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது சிகிச்சையில் 1,366 பேர் உள்ளனர். 123 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.